மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து காட்டமான கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தில் சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய மாநாட்டுக் கட்சி, பி.டி.பி. கட்சிகள் கடுமையான கருத்துகளைத் தெரிவித்துவருகின்றன.
தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, 'சட்டப்பிரிவு 370ஐ மீட்க உயிருள்ளவரை போராடுவேன். தூக்கிலிட்டாலும் அதற்கு கவலைப்பட மாட்டேன்' எனத் தெரிவித்தார்.
அதேபோல் பி.டி.பி. தலைவர் மெகபூபா முஃப்தி தேசியக்கொடியை நான் இனி சீண்ட மாட்டேன் எனத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துகளை வன்மையாகக் கண்டித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி.
மேலும், "மெகபூபா முஃப்தி, பரூக் அப்துல்லா இந்தியாவில் வசிக்க எந்தவித உரிமையற்றவர்கள். சீனாவை வைத்து காரியம் சாதிப்போம் என்ற தொனியில் கருத்து தெரிவிக்கும் இவர்களை உலக நாடுகளுக்கு என்ன சமிக்ஞை தர விரும்புகிறார்கள்" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் விதிகளை மீறிய பிகார் வேளாண்துறை அமைச்சர்