ETV Bharat / bharat

போலி மருத்துவர்கள் மீது உடனடி நடவடிக்கை - மருத்துவக்குழு அறிவுறுத்தல்

புதுச்சேரி: போலி மருத்துவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மருத்துவ வல்லுநர் குழு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

team
team
author img

By

Published : Oct 3, 2020, 9:53 AM IST

புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக மருத்துவ வல்லுநர்கள், ஜிப்மர் மருத்துவர்களுடன் இணைந்து கரோனா பற்றி ஆராய்ந்து அரசுக்கு உடனுக்குடன் ஆலோசனை வழங்கி வருகின்றனர். அதன்படி, தொற்று பரவாமல் தடுப்பது குறித்த இந்திய மருத்துவக் கழக குழுவின் ஆலோசனை கூட்டம், ஆளுநர் மாளிகையில் நேற்றிரவு நடைபெற்றது.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக மருத்துவர்கள் பல்வேறு ஆலோசனைகளை அரசுக்கு வழங்கினர். அதில், ” புதுச்சேரியில் இரு வாரத்துக்கு ஒருமுறை தனியார் கிளினிக் வைத்திருக்கும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். பரிசோதனைகளை அதிகரிப்பதற்கான வழிகள், அதற்கான பரிந்துரைகள் குறித்து அவர்களிடம் விவாதிக்க வேண்டும். அந்தந்தப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களுடனும் இணைந்து, போலி மருத்துவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய உத்தரவிட்டும், பலர் அதை முறையாக பின்பற்றுவதில்லை. எனவே, பொது இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல் துறையுடன் இணைந்து கண்காணிக்க வேண்டும் “ போன்ற அறிவுறுத்தல்களை மருத்துவக் குழுவினர் வழங்கினர்.

தொடர்ந்து நடந்த கூட்டத்தில், அனைத்து களஆய்வாளர்களும் பல்ஸ் ஆக்சி மீட்டரை கட்டாயம் எடுத்துச்செல்லுதல், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத் தகவல் அனைத்தையும் வட்டார மொழியில் தயாரித்து, யூடியூப்பில் பதிவேற்றம் செய்தல் எனவும் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவிஷூல்ட் தடுப்பூசி போட்டவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.