இதற்கான ஆலோசனைக் கூட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமையில் சுகாதாரத்துறை அலுவலகத்தில் நடந்தது. இதில், இயக்குனர் மோகன் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அப்போது, படிப்படியாக கல்லூரிகளை தொடங்க வேண்டும், கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அரசுக் கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். அதபோன்று கல்லூரி பேராசிரியர்களும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். சிறப்பு பேச்சாளர்களை கொண்டு சொற்பொழிவு நடத்துவது, மாணவர்கள் சுற்றுலா செல்வது, களப்பயணம் செல்வது ஆகியவற்றுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்திடல், உடற்பயிற்சி மையம், கேன்டீன், வாகனம் நிறுத்தும் இடம் ஆகியவற்றில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்பதனை கல்லூரி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். மத்திய அரசின் பாதுகாப்பு காட்டுப்பாடுகளை புதுச்சேரி சுகாதாரத்துறை பின்பற்ற அனைத்து மருத்துவ கல்லூரிகளை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி புதுச்சேரியில் முதல்கட்டமாக இரண்டு தனியார் கல்லூரிகளான பிம்ஸ், மகாத்மா காந்தி கல்லூரி ஆகியவை திறக்கப்படுகின்றன. அனைத்து கல்லூரிகளும் 7ஆம் தேதி முதல் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல் - நிர்வாகி மீது எம்எல்ஏ சரமாரி குற்றச்சாட்டு!