டெல்லியில் ஏற்பட்ட வன்முறை மோதல்கள் குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில், நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், டெல்லியில் ஏற்பட்டிருக்கும் வன்முறை 1984இல் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தை நினைவுபடுத்துவதுபோல் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்தச் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இதன்மூலம் மட்டுமே இந்த விவகாரத்தில் ஒரு முடிவை எட்ட முடியும்.
வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'ஹலோ... அமித் ஷாவா... எப்ப சார் வெளிய வருவீங்க?' - டெல்லி வன்முறை குறித்து சிவசேனா தாக்கு