இதுதொடர்பாக, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ட்விட்டரில், “உத்தரப் பிரதேச வருவாய் அலுவலர் தலித் சமூகத்தைச் சேர்ந்த அரவிந்த் குமார் என்பவர் பாஜக எம்.பி. சுப்ரத் பதக் மற்றும் அவரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார் என்று செய்திகள் வெளியாகின. பணியிலுள்ள அலுவலரைத் தாக்குவது அவமானகரமானது” என கூறியிருந்தார்.
மற்றொரு ட்வீட்டில், “சிறைக்குச் செல்வதற்கு பதிலாக இந்த எம்.பி. வெளியில் சுற்றுவது வருத்தமளிக்கிறது. இது போன்ற சூழ்நிலைகளில், முதலமைச்சர் இந்த எம்.பி.க்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். எதிர்காலத்தில், இதுபோன்ற ஒரு சம்பவம் வரக்கூடாது” என தெரிவித்துள்ளார்.
ஏழைகளுக்கு அளிக்கப்படும் உணவுத் தொடர்பாகப் புகார் எழுந்ததை விசாரிக்கையில், அலுவலர் அரவிந்த் குமாருக்கும் எம்.பி. பதக்குக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது தொலைபேசி வாயிலாகவும், அரவிந்த் குமாருக்குப் பதக் மிரட்டல் விடுத்தார் எனவும் கூறப்படுகிறது.
-
1. उत्तर प्रदेश के कन्नौज जिले में अपनी ईमानदारी से ड्यूटी कर रहे एक दलित तहसीलदार के साथ अभी हाल ही में, वहाँ के बीजेपी सांसद ने, जो मार-पीट व दुर्व्यवहार आदि किया है, यह अति शर्मनाक है। 1/3
— Mayawati (@Mayawati) April 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">1. उत्तर प्रदेश के कन्नौज जिले में अपनी ईमानदारी से ड्यूटी कर रहे एक दलित तहसीलदार के साथ अभी हाल ही में, वहाँ के बीजेपी सांसद ने, जो मार-पीट व दुर्व्यवहार आदि किया है, यह अति शर्मनाक है। 1/3
— Mayawati (@Mayawati) April 9, 20201. उत्तर प्रदेश के कन्नौज जिले में अपनी ईमानदारी से ड्यूटी कर रहे एक दलित तहसीलदार के साथ अभी हाल ही में, वहाँ के बीजेपी सांसद ने, जो मार-पीट व दुर्व्यवहार आदि किया है, यह अति शर्मनाक है। 1/3
— Mayawati (@Mayawati) April 9, 2020
இந்த குற்றஞ்சாட்டுகளை எம்.பி. பதக் தரப்பு மறுத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவலர்கள் எம்.பி. பதக் மீது பட்டியலின மக்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.