ETV Bharat / bharat

ஊடுருவலுக்கு முன்பிருந்த நிலையை மீட்டெடுப்பது முக்கியமானது - சசி தரூர் - இந்திய சீன மோதல்

ஊடுருவலுக்கு முன்பிருந்த நிலையை மீட்டெடுப்பது முக்கியம் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

May-June status can't be new normal at LAC, says Tharoor

author img

By

Published : Jul 8, 2020, 12:59 AM IST

இந்திய, சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக் பகுதியின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவம் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். இருநாடுகளுக்கிடையே பதற்றம் நிலவியதைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தை திரும்பபெறுவதாக இருநாடுகளும் ஒப்புக் கொண்டன. இதனிடையே, சீனா தனது ராணுவத்தை திரும்பபெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திரும்பபெறும் நடவடிக்கையை வரவேற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான சசி தரூர், ஊடுருவலுக்கு முன்பிருந்த நிலையை மீட்டெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

  • Disengagement is welcome, but means little unless the status quo ante is restored. Otherwise we'll yet again see both sides declare peace, with China having changed the facts on the ground &moved the LAC closer to where it wants. The May-June status cannot become the"new normal".

    — Shashi Tharoor (@ShashiTharoor) July 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராணுவத்தின் திரும்பபெறும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால், ஊடுருவலுக்கு முன்பிருந்த நிலையை மீட்டெடுப்பது அதை விட முக்கியமானது. இல்லையெனில், இரண்டு தரப்பு மீண்டும் அமைதியை நிலைநாட்டுவதை பார்க்க முடியாது. களத்தில் தரவுகளை மாற்றியமைத்து எல்லையை தனக்கு ஏற்றார்போல் சீனா மாற்றியமைக்கும். மே, ஜூன் மாத நிலவரத்தை புதிய வழக்கமாக்கி விடக் கூடாது" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: லட்சக்கணக்கான குடும்பங்களை பாதிப்புக்குள்ளாக்கிய பொருளாதாரம் - ராகுல் காந்தி விமர்சனம்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.