தாய், சேய் ஆரோக்கியம் குறித்த கருத்தரங்கில் காணொலி மூலம் பங்கேற்ற மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், "கரோனா தொற்றால் அதிகமாகப் பாதிப்புக்குள்ளான பெண்கள், குழந்தைகள், இளம் பருவத்தினருக்குத் தொடர்ந்து அனைத்து சுகாதார சேவைகள், பொருள்கள் வழங்க அனைத்து மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு, அவை அமைச்சகத்தால் கண்காணிக்கப்பட்டுவருகிறது.
அதுமட்டுமின்றி மருத்துவமனைகளில் இலவச பிரசவம், சிகிச்சை எளிதாக கிடைக்கவும், தரமான சிகிச்சை வழங்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன்மூலம் தாய், சேய் இறப்பு விகிதத்தைக் குறைக்கலாம்” என்றார்.
மேலும், “இதன் மூலம் தற்போது இந்தியாவில் தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்தும், பெரிய மகப்பேறு சிகிச்சை தாமதம் இல்லாமல் கிடைக்கவும் வழிவகை செய்ய முடியும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...அரியர் தேர்வுகள் ரத்து: அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் எதிர்ப்பு!