மாதத்தின் இறுதி ஞாயிறான இன்று நாட்டுமக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்வில் கரோனாவை எதிர்கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக பேசினார்.
அவர் பேசியதாவது, 'இது போன்ற அசாதாரண காலத்தில் மக்கள் விழிப்புணர்வுடன் முகக் கவசத்தைத் தவறாமல் அணிய வேண்டும். முகக்கவசம் அணிவது தொடர்பாக, மக்களின் புரிதல் தற்போது மாறியுள்ளது. முன்பு முகக்கவசம் அணிபவர்களை நோயாளிகளாகப் பார்க்கும் மனநிலை மாறி, தற்போது இந்தப் பழக்கம் பாதுகாப்பு சார்ந்த, அறிவார்ந்த நடவடிக்கையாக மக்கள் மனதில் பதிந்துள்ளது.
அதேபோல், பழம் வாங்கி சாப்பிடுவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் உணவுப்பொருட்களை உட்கொள்ளுதல் ஆகியவை அன்றாட பழக்கமாக மாறி வருகிறது. இதுபோன்ற ஆக்கப்பூர்வமான சுகாதாரப் பழக்கங்களை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்புவதைத் தவிர்த்தல், தவறாமல் கைகளைக் கழுவதல் போன்ற நடவடிக்கைகளை மக்கள் வாழ்நாள் பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும்' எனப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஊரடங்கால் தவித்த மணமகனுக்கு உதவிய காவலர்!