புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராஜாங்கம் தலைமையிலான, கட்சி உறுப்பினர்கள் சிலர், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியைச் சந்தித்து மனு ஒன்றினை அளித்தனர்.
அந்த மனுவில், 'புதுச்சேரியில் 12 மணி நேர வேலை நேரத்தை மீண்டும் 8 மணி நேரமாக மாற்ற வேண்டும். புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மின்சாரக் கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
இந்தச் சந்திப்பின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள், முருகன் மற்றும் பிரதேச குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் ஜூன் 1ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்வு