ராஜஸ்தானின் ரத்தன்கர் ராயல் மருத்துவமனைக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் மே 19ஆம் தேதியன்று 36 வயதுடைய திருமணமான பெண் ஒருவர், தனது பெற்றோர் வீட்டிற்குச் செல்வதற்கு பேருந்திற்காக காத்திருந்தார்.
அவர் தனியாக இருப்பதைக் கண்ட மூன்று இளைஞர்கள், அவரைக் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
இது குறித்து புகார் அளிக்க தயங்கிய அப்பெண், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மே 22ஆம் தேதியன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து குற்றவாளிகளான முஷ்தாக், திரிலோக் நய், ராஜ்குமார் ஆகியோரை கைதுசெய்த காவலர்கள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 15 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு: இளைஞர்கள் கைது!