ஒடிசா மாநிலம் அங்கூல் மாவட்டம் திகர்படா (Tikarpada ) பஞ்சாயத்து மஜ்கிபடா (Majhipada) கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜோலி தெகுரி (Jolly Dehury), சோட்டு கஞ்சு (Chhotu Ganju). இருவரும் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்கள். ஜோலி கடந்த ஆண்டு (2018) மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார். அதன் பின்னர் அவருக்கு திகர்படா கிளர்ச்சி இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் தீவிர மாவோயிஸ்டாக செயல்பட ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் பூக்க ஆரம்பித்தது. இதையடுத்து இருவரும் வன்முறையை கைவிட்ட நினைந்தனர். தொடர்ந்து காவலர் முன்னிலையில் சரணடைந்தனர். முன்னதாக இவர்களை கைது செய்ய முனைந்த காவலர்கள் பலமுறை தோற்றனர். இந்த மாவோயிஸ்ட் ஜோடிக்கு நேற்று முன் தினம் (நவ.20) திருமணம் நடந்தது. திருமண பந்தத்தில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தம்பதிகள் கூறினர்.

இதையும் படிங்க: கேரள முதலமைச்சருக்கு மாவோயிஸ்ட்டுகள் கொலை மிரட்டல்!