கடந்த ஒருவார காலமாக சீனாவின் தெற்கு பகுதியில் கனமழை பெய்துவருகிறது. இதனால் அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சீனாவின் தாழ்வான பகுதிகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏழு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து நாசமாகின. வெள்ளப்பெருக்கின்போது காணாமல்போன 40 பேரை மீட்டுப்புப் படையினர் தேடிவருகின்றனர்.