புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அண்மையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில், பாஜகவில் இணைந்த நமச்சிவாயம் இன்று (ஜன.29) புதுச்சேரி திரும்பினார். புதுச்சேரியில் அவரது ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஊர்வலமாக பாஜக அலுவலகம் வந்த அவர், மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி, இதுவே எங்களின் தாரக மந்திரம். எங்களைப் போல பலர் பாஜகவில் இணையத்தயாரக உள்ளனர்.
காங்கிரஸில், கட்சிக்காரர்களுக்கு வாரியத் தலைவர் பதவி வழங்க சோனிய காந்தி அனுமதி அளித்தும் முதலமைச்சர் நாராயணசாமி வழங்காதது ஏன்? 85 விழுக்காடு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன் எனக்கூறும் முதலமைச்சர் ஏதாவது ஒன்றை விரல்விட்டு கூறமுடியுமா? புதுச்சேரியை போராட்டக்களமாக மாற்றியது தான் நாராயணசாமியின் சாதனை" என்றார்.
இதையும் படிங்க: ஏழு பேர் விடுதலை: ஆளுநரை சந்தித்தார் முதலமைச்சர்