கர்நாடகத் தலைநகரான பெங்களூருவில் இயங்கி வந்த சட்டவிரோத கேசினோவை அம்மாநிலக் காவல் துறையினர் சோதனை செய்ததில், 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக இயங்கி வந்த இந்தக் கேசினோவில் சூதாட்டம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கிழக்கு மண்டல துணைக் காவல் ஆணையர் சரணப்பா தலைமையில் கேசினோவில் காவல் துறையினர் சோதனை செய்தனர்.
இது குறித்து காவலர் ஒருவர் கூறுகையில், "பெங்களூருவில் கேசினோ திறக்கவே கடந்த இரண்டு ஆண்டுகளாக அனுமதி அளிக்கப்படவில்லை. இந்தக் கேசினோவைத் திறக்க அனுமதி அளித்தது யாரென விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.