கோவா முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் (63) கடந்த அக்டோபர் மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன்பின் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த அவர், அவ்வப்போது அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கோவா அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களிலேயே இரவு 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களின் இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர். அவரின் உடல் அம்மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை கட்சித் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
அதன்பின் 11 மணி முதல் மாலை நான்குமணிவரை பொதுமக்களின் அஞ்சலிக்காக கலா அகாதெமியில் அவரது உடல் வைக்கப்படுகிறது.
இறுதியாக கோவாவின் மிர்மர் பகுதியில் முழு அரசு மரியாதையுடன் மனோகர் பாரிக்கரின் உடல் நல்லடக்கம் செய்யப்படஇருக்கிறது.