ETV Bharat / bharat

'குவாரன்டீனோ' எனப்பெயர் சூட்டப்பட்ட குழந்தை - இம்மானுவேல் குவாரண்டீனோ

இம்பால்: தனிமைப்படுத்தல் மையத்தில் பிறந்த குழந்தைக்கு இம்மானுவேல் குவாரன்டீனோ என, அக்குழந்தையின் பெற்றோர் பெயர் சூட்டினர்.

தனிமைப்படுத்துதல் மையத்தில் பிறந்த குழந்தை: குவாரண்டீனோ  என பெயர் சூட்டிய பெற்றோர்!

author img

By

Published : Jun 8, 2020, 12:23 AM IST

கோவாவிலிருந்து புறப்பட்ட சிறப்பு ரயிலில் மே 27ஆம் தேதி செய்லுந்தாங் கோங்சாய் - நெங்னிஹாட் தம்பதி மணிப்பூர் வந்தனர். நெங்னிஹாட் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவர்கள் இம்மானுவேல் என்ற பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் நெங்னிஹாட் மே மாதம் 31ஆம் தேதி பிரசவ வலியால் துடித்துள்ளார்.

இதையடுத்து மருத்துவர் தங்மின்லுன் சின்சோன், மருத்துவர் நெங்பில்ஹிங் மிசோவ் இருவரும் அப்பெண்ணுக்கு சிகிச்சையளித்தனர். எவ்வித சிக்கலும் இல்லாமல் சுகப்பிரசவமாக நெங்னிஹாட் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

இது குறித்து காங்போக்பி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த மிசோவ் கூறுகையில், 'இம்மானுவேல் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த இந்த தம்பதிக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் மே 30ஆம் தேதி வெளிவந்தன. இருவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை. கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மகப்பேறு மருத்துவர் உள்பட இரண்டு மருத்துவர்கள் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர்' என்றார்.

தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பிறந்த அக்குழந்தைக்கு இம்மானுவேல் குவாரன்டீனோ என்று குழந்தையின் பெற்றோர் பெயர் சூட்டினர். தற்போது குழந்தையும், குழந்தையின் பெற்றோரும் காங்போக்பி மாவட்டத்திலிருக்கும் சோங்லாங் அவென்யூவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: அமெரிக்க ரியாலிட்டி ஷோவில் வாயைப்பிளக்கவைத்த இந்தியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.