மணிப்பூரில் அமைந்துள்ள மபிதேல் தடுப்பணைக்கு கடந்த 28ஆம் தேதி சுற்றுலாவிற்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் படகு சவாரி செய்துள்ளனர். அப்போது, படகில் மொத்தம் 10 பேர் இருந்தனர். இந்நிலையில், படகு திடீரென சரிந்து அந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக உடல்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படையினர் ஈடுபட்டுவந்தனர். அப்போது, மே 3ஆம் தேதியன்று ராஜீவ் என்பவரது உடல் மீட்கப்பட்டது.
ரோமன் (21), ராணி (19) ஆகியோரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில், அந்த இருவரின் உடல்களும் இன்று மீட்கப்பட்டன.