ETV Bharat / bharat

பூச்சிக்கொல்லித் தடையால் கலக்கமடைந்துள்ள மாம்பழ சாகுபடி விவசாயிகள் - அல்போன்சோ மாம்பழ ஏற்றுமதி

ஹைதரபாத்: நாடு முழுவதும் 27 பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தடைசெய்ய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு தங்கள் வாழ்வாதரத்தைப் பாதிக்கும் என மகாராஷ்டிரா மாம்பல சாகுபடி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு இதோ...

Mango
Mango
author img

By

Published : Jun 9, 2020, 1:06 PM IST

Updated : Jun 9, 2020, 5:04 PM IST

நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் 27 பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான கருத்துகளை வரும் 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்க அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விவசாயிகள் குழப்பத்திலும் கவலையிலும் உள்ளனர். மாம்பழச் சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த தடை உத்தரவின் காரணமாக பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேற்கண்ட 27 பூச்சிக் கொல்லிகளில் 8 முதல் 10 பூச்சிக் கொல்லிகள் மாம்பழ சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த பூச்சிக்கொல்லிகள் மாம்பழச் சாகுபடிக்கு முக்கியப் பங்கு வகிப்பவை. இவை பூச்சி, பூஞ்சை போன்றவற்றிலிருந்து மரத்தை பாதுகாக்கும். இவை தடை செய்யப்பட்டால் விவசாயிகள் அதிக விலையுள்ள மருத்துகளைத் தேடிச்செல்லும் சூழல் உருவாகும். இந்தச் செலவை விவசாயிகளால் தாங்க முடியாது என நந்தை விவசாய சந்தையின் உரிமையாளர் மொஹிந்தர் பாமே தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் பல்வேறு ஆண்டுகளாகவே மேற்கண்ட பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்திவரும் நிலையில், இவை விளைச்சலைப் பெருக்கி அவர்களுக்கு நல்ல பலன்களை அளித்துவருகின்றன. தற்போது பயன்படுத்திவரும் பூச்சிக்கொல்லிகள் இந்தியாவிலேயேத் தயாரிக்கப்பட்டு, சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இவை தடைசெய்யப்படும் பட்சத்தில் புதிய பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதில் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாவர்கள். பொருளாதார ரீதியாகவும் அவை சுமையாக மாறிவிடும்.

மாம்பழச் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படும் 10 முதல் 12 பூச்சிக்கொல்லிகளை தடை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. பல ஆண்டுகளாக விவசாயிகள் இதை பயன்படுத்திவருகின்றனர். இவை பல பின்விளைவுகளைத் தருகின்றன என்பது உண்மை. நீர், மண் ஆகியவற்றைப் பாதுகாக்க, அரசின் தடையை விவசாயிகள் ஏற்க வேண்டும் என மேங்கோ ஆர்ச்சட் நிறுவனத்தின் உரிமையளர் பிரன்னா பீத்தே தெரிவித்துள்ளார்.

கலக்கமடைந்துள்ள மாம்பழ சாகுபடி விவசாயிகள்

மாம்பழ ஏற்றுமதியின் முக்கிய மையமாக மும்பை விளங்குகிறது. இந்தியாவிலிருந்து சுமார் 40 ஆயிரம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், கரோனா லாக்டவுன் காரணமாக இரண்டு மாத காலமாக மாம்பழ ஏற்றுமதி முற்றிலும் முடங்கியுள்ளது. கடந்தாண்டோடு ஒப்பிடும்போது ஏற்றுமதியின் அளவு 52 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளது.

அல்போன்சோ உள்ளிட்ட முக்கியமான ஏற்றுமதி ரக மாம்பழங்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், இந்தாண்டு கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். அரசின் தற்போதைய தடை நடவடிக்கை அவர்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்துமோ என்பதே விவசாயிகளின் அச்சமாக உள்ளது. ஈடிவி பாரத் செய்திகளுக்காக செய்தியாளர் குழு.

இதையும் படிங்க: பூச்சிக்கொல்லி தடை வாழ்வாதரத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் - இமாச்சலப் பிரதேச விவசாயிகள் கவலை

Last Updated : Jun 9, 2020, 5:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.