ETV Bharat / bharat

விமான இருக்கை கீழே குழாயில் மறைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகள் பறிமுதல்! - மங்களூர் விமான நிலையம்

பெங்களூரு: துபாயிலிருந்து மங்களூரு வந்த விமான இருக்கையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 33 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை விமான புலனாய்வு பிரிவினர் பறிமுதல்செய்துள்ளனர்.

gold
old
author img

By

Published : Sep 28, 2020, 11:51 PM IST

கர்நாடக மாநிலம் மங்களுரு விமான நிலையத்திற்கு செப்டம்பர் 27ஆம் தேதி துபாயிலிருந்து இண்டிகோ நிறுவனத்தின் மீட்பு விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்திவருவதாக கிடைத்த தகவலின்படி, விமான புலனாய்வு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, விமான இருக்கையின் கீழே உள்ள குழாயில் 6 தங்க கட்டிகள் மறைத்துவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் 33 லட்சம் இருக்கும் என கணக்கிட்டுள்ளனர். இது குறித்து விமான புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

முன்னதாக, செப்டம்பர் 5ஆம் தேதி கேரளாவில் உள்ள காலிகட் விமான நிலையத்திற்கு சவூதி அரேபியாவிலிருந்து வந்த பயணி ஒருவர், பிரஷர் குக்கருக்குள் சுமார் 700 கிராம் தங்கத்தை மறைத்துவைத்து கடத்திவந்திருந்தார். அதன் மதிப்பு சுமார் 36 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.