ETV Bharat / bharat

'எனக்கு இதை சமைத்து தரியா' - மனுஷன் கையை வெட்டிக் கொடுத்த சைக்கோ கணவன்! - Bijnor man chopped off hand from dead body for cooking

லக்னோ: மனைவியிடம் மனிதனின் கையை வெட்டிக் கொடுத்து கணவன் சமைக்க சொன்ன சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லக்னோ
லக்னோ
author img

By

Published : Mar 11, 2020, 7:49 PM IST

உத்தரப் பிரதேசம், பிஜ்னோர் (Bijnor) அருகேயுள்ள டிக்கோபூர் கிராமத்தில் வசித்து வருபவர் சஞ்சய் (32). இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு, வீட்டிலிருந்த மனைவியிடம் மனிதனின் கையைக் கொடுத்து சமைத்துத் தர வேண்டும் எனக் கூறியுள்ளார். இதைப் பார்த்த அவரின் மனைவி மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த சஞ்சய்யின் மனைவி, கண் விழித்துப் பார்க்கும் போது, தனது கணவர் அந்தக் கையை சமைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத் தொடர்ந்து, தனது கணவரை வீட்டில் வைத்து பூட்டிவீட்டு அக்கம் பக்கத்தினரிடம் இத்தகவல் குறித்து தெரிவித்துள்ளார்.

இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சஞ்சயிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் உடல்களை தகனம் செய்யப்படும் இடத்திலிருந்து இறந்தவரின் கையை வெட்டி, எடுத்து வந்துள்ளது தெரியவந்தது.

மேலும், இவர் குடிபோதையிலும், சிறிது மனநலம் பாதிப்படைந்துள்ளதாலும் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தலைமை காவலருக்கு மண்டை உடைப்பு - குற்றவாளிகளுக்கு காவல் துறை வலைவீச்சு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.