உத்தரபிரதேச மாநிலம் பூடான் பகுதியை சேர்ந்தவர் பன்னா லால். இவருக்கு திருமணமாகி ஐந்து பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி மீண்டும் கர்ப்பாக இருந்துள்ளார்.
ஆண் குழந்தை இல்லாத காரணத்தை கூறி மனைவியிடம் பன்னா லால் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது மனைவிக்கு பிறக்கப்போவது ஆண் குழந்தையா இல்லை பெண் குழந்தையா என்று தெரிந்துகொள்ள கர்ப்பமாக இருக்கும் மனைவியின் வயிற்றை கிழித்து உள்ளார் பன்னா லால்.
சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வீட்டின் உள்ளே சென்று, பன்னா லாலின் மனைவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிறகு இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பன்னா லாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.