ETV Bharat / bharat

பெண் குழந்தைகளாகப் பிறந்ததால் மனைவிக்கு முத்தலாக்!

டேராடூன்: பெண் குழந்தைகளாகப் பிறந்ததால் தனது மனைவிக்கு முத்தலாக் கூறிய கணவர் மீது உத்தரகாண்ட் மாநில காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெண் குழந்தைகளாய் பிறந்ததால் மனைவிக்கு தலாக் சொன்ன கணவர்

author img

By

Published : Jun 19, 2020, 3:25 PM IST

பெண்குழந்தைகளாக பிறந்ததால் தனது கணவர் முத்தலாக் கூறி தன்னை விவகாரத்து செய்ததாக உத்தரகாண்ட் மாநிலம் காஷிபூரைச் சேர்ந்த பெண் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

அவர் பதிவு செய்த வழக்கில், தனக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நான்கு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்ததால் எனது மாமியார் என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். எனது கணவர் கடந்தாண்டு ஒரு பெண்ணை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.

தற்போதுதான் அந்தத் திருமனம் குறித்து எனக்குத் தெரியவந்தது. அதுகுறித்து கேட்டபோதெல்லாம் என்னை அடித்து துன்புறுத்தினார்.

பின்பு எங்கள் இருவரையும் எனது கணவர் ஒரே வீட்டில் தங்க வைத்தார். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க, எனது உறவினர் முன்னிலையில் எனது கணவர் முத்தலாக் கூறிவிட்டார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தலைவராகும் இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.