ஹரியானாவில் முக்கிய சாலையில் ஒருவர், காவல் துறை உடையில் சுற்றித்திரிந்துள்ளார். அப்போது, அவ்வழியே சென்ற போலீஸ் கண்ட்ரோல் ரூம் (பி.சி.ஆர்.) வேனிலிருந்த காவலர்கள், சந்தேகத்தின்பேரில் அவரை தடுத்துநிறுத்தி விசாரித்துள்ளனர்.
அப்போது, அவர் தன்னுடைய போலீஸ் அடையாள அட்டையை வழங்கியுள்ளார். ஆனால், அது போலியான ஐடி என கண்டுபிடித்த காவலர்கள், உடனடியாக அருகிலிருக்கும் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் அவரை கைதுசெய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கேந்திரிய போலீஸ் கல்யாண் பந்தர் சர்ச்சை - தலைமை நிர்வாகியை மாற்றிய மத்திய உள்துறை!