ETV Bharat / bharat

தெலங்கானாவில் தொடரும் ஆணவக் கொலை! - கொலை

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் தங்கை மாற்று சமூகத்தை சேர்ந்தவரை காதலித்ததால், ஆத்திரமடைந்த சகோதரர், காதலனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இது தொடர்பாக, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆணவக் கொலை
author img

By

Published : Jul 6, 2019, 11:09 AM IST

Updated : Jul 6, 2019, 11:21 AM IST

தெலங்கானா மாநிலத்தில் பத்ராத்ரி கொத்தகுடம் பகுதியில் வசித்து வருபவர் சகில்(22). இவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு இருவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைமீறி இருவரும் திருமணம் செய்து கொள்வதாக இருந்த நிலையில், பெண்ணின் சகோதரர் சிவ சங்கருக்கு திருமண விவகாரம் தெரிய வர, அதை அவர் எதிர்த்துள்ளார்.

தொடர்ந்து இரு வீட்டார் தரப்பிலும் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சிவ சங்கர் - சகில் இருவரும் ஒரே பிறந்தநாள் விழாவிற்கு சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. இந்த மோதலில் சிவ சங்கர், சகிலை கத்தியால் குத்திவிட்டு தப்பித்துள்ளார். அதில் சம்பவ இடத்திலேயே சிவ சங்கர் உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், உடற்கூறாய்வுக்காக சிவ சங்கரின் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், தெலங்கானா மாநிலத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகிறது என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Last Updated : Jul 6, 2019, 11:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.