மகாராஷ்டிரா மாநிலம் மேற்கு புறநகர் பகுதியான கண்டிவாலியைச் சேர்ந்தவர் துர்கேஷ். இவர் புனேவிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார்.
இந்நிலையில் கரோனா அச்சம் காரணமாக விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பினார். அவருக்கு இருமல், காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அவர் வீட்டுக்குள்ளே இருந்துள்ளார்.
இதற்கிடையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறி சகஜமாக நடமாடியுள்ளார். இதனால் துர்கேசுக்கும் அவரது அண்ணன் ராஜேஷ் லட்சுமி தாகூருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறு காரணமாக இருவரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்நிலையில் ராஜேஷ் அருகிலிருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து துர்கேசை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த துர்கேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்ததும் காவலர்கள் சம்பவப் பகுதிக்கு விரைந்து வந்து ராஜேசை கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
கரோனா அச்சம் காரணமாக சொந்த அண்ணணே தம்பியை அடித்துக் கொன்றது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதையும் படிங்க: சென்னையில் ஒரே நாளில் தடையை மீறி சுற்றியதாகக் கூறி 1,400 வழக்குகள் பதிவு!