உத்தரப் பிரதேச மாநிலம், பள்ளியா மாவட்டத்தில் தனியாக வீட்டில் இருந்த 14 வயது சிறுமியிடம், 22 வயது இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டார். இதனைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்த இளைஞர், மதம் மாறி தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சிறுமியைக் கட்டாயப்படுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் சொல்லத் தயங்கிய சிறுமி, ஒரு கட்டத்தில் இளைஞரின் அச்சுறுத்தல் பொறுக்காமல் தனது பெற்றோரிடம் அனைத்தையும் கூறியுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், இளைஞர் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இளைஞர் மீது மதமாற்ற தடுப்பு சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு குறித்து காவல் கண்காணிப்பாளர் விபின் டாதா, ’இந்தச் சம்பவம் கடந்த 11ஆம் தேதி நடந்துள்ளது. சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் இரண்டு நாள்கள் (ஜன.13) கழித்துதான் தெரிவித்துள்ளார். குற்றச்செயலில் ஈடுபட்ட இளைஞரின் குடும்பத்தினர் அதிகார பலமுடையவர்கள் என்பதால் சிறுமியின் பெற்றோர் புகாரளிக்க தயங்கியுள்ளனர். இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில், குற்றத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய இளைஞரையும் அவரது தந்தையும் ரயில்வே நிலையம் அருகே கைது செய்து இருவரையும் சிறையில் அடைத்தோம்’ என்றார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 44 ஆண்டுகள் சிறை!