ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் இருந்து கேரளா மாநிலம் கொச்சிக்கு நேற்று பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர் பெயர் நெளஷத் என்பதும், துபாயில் இருந்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவரது ஆடைகளை சோதனை செய்த போது தலையின் மேற்பகுதியில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
தலையின் மையப்பகுதியில் உள்ள முடியை ஷேவ் செய்துவிட்டு அதில் தங்கத்தை மறைத்து விக் வைத்துள்ளார். அவரிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள 1.25 கிலோகிராம் எடை கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
'அயன்' பட பாணியில் தலையில் விக் வைத்து கடத்தினால், சுங்க துறை அலுவலர்கள் கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்து, கடத்தலில் ஈடுபட்ட நெளஷத் கையும் களவுமாக பிடிபட்டது, அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: