சிவராம கிருஷ்ணா - லக்ஷ்மி கங்கா பவானி தம்பதி ஐதராபாத் சின்தல் பகுதியில் வசித்து வந்தனர். கிருஷ்ணா கூடுதலாக வரதட்சணை கேட்டு லக்ஷ்மியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கிருஷ்ணா, மனைவி லக்ஷ்மியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்துவிட்டு, தண்ணீர் டிரம்மில் வைத்து வல்லவெள்ளி கிராம வனப்பகுதியில் உடலைப் புதைத்துள்ளார்.
இதனையடுத்து லக்ஷ்மியின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து கணவர் சிவராம கிருஷ்ணா தான் கொலை செய்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று வெளியான தீர்ப்பில் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,500 அபராதமும் விதித்து ஐதராபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.