ETV Bharat / bharat

சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம்: இளைஞர் தற்கொலை!! - மத்தியப் பிரதேசத்தில் இளைஞர் தற்கொலை

மத்தியப் பிரதேசம்: முன்விரோதம் காரணமாக சிறுநீர் குடிக்க வைத்தால் அவமானம் தாங்க முடியாமல் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Madhya Pradesh news  Suicide  மத்தியப் பிரதேசத்தில் இளைஞர் தற்கொலை  இளைஞர் தற்கொலை
Suicide
author img

By

Published : May 15, 2020, 3:01 PM IST

மத்தியப் பிரதேசம் மாநிலம் சிவ்புரி நகரைச் சேர்ந்தவர் விகாஸ் ஷர்மா. இவர் நேற்று தனது வீட்டின் அருகேயுள்ள குழாய்க்கு தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த மனோஜ் கோலி, தாராவதி கோலி, பிரியங்கா கோலி ஆகிய மூவர் அவரை அடித்து சாரமரியாகத் தாக்கி சிறுநீர் குடிக்க வைத்துள்ளனர்.

இதையடுத்து, தனக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி எண்ணி மனமுடைந்த விகாஸ் சர்மா தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்தக காவல் துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் காவல் துறையினர் தற்கொலைக்கு காரணமான மூவர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், விகாஸ் சர்மாவின் குடும்பத்திற்கும் மனோஜ் கோலியின் குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்ததால் அவரை அடித்து சிறுநீர் குடிக்க வைத்தது தெரியவந்தது. மேலும் சிறுநீர் குடிக்க வைத்து இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மதுரையில் வசூல் பணத்தை வழிப்பறி செய்த திருட்டுக் கும்பல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.