கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மங்கல் அணை பகுதியில் படப்பிடிப்பிற்காக சென்ற மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி, அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின சிறுவர்களை நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின் அவர்களிடம் நலம் விசாரித்த அவர், சிறுவர்களுக்கு உதவி பொருட்கள் உட்பட பரிசுகளை வழங்கினார். இது சிறுவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அங்கிருந்த சிறுவர்கள், பெரியவர்கள் உட்பட அனைவருடனும் செல்ஃபி எடுத்துக்கொண்ட மம்முட்டி, படப்பிடிப்பில் அவர் நடிப்பதை அச்சிறுவர்கள் நேரில் காண ஏற்பாடுகளையும் செய்தார்.
நடிகர் மம்முட்டி தனது பெயரில் நடத்திவரும், மம்முட்டி கேர் அண்டு சேர் தொண்டு நிறுவனம் மூலம் கடந்த ஐந்தாண்டுகளாக இப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின சிறுவர்களுக்கு கல்வி உதவி, மருத்துவ வசதி, உள்ளிட்டவைகளை செய்துவருகிறார்.