கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் வைரஸ் தொற்றின் தாக்கம் 500-ஐ நெருங்குகிறது. மேலும், இதுவரை இந்த வைரஸ் தொற்றால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து மக்களைக் காப்பதில் மேற்கு வங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், மக்களின் ஒத்துழைப்பும் கூட்டு முயற்சியும் வைரஸ் பரவலுக்கு எதிராகப் போராட உதவும்.
-
It is my sincere request to all the fellow citizens to abide by Government guidelines.
— Mamata Banerjee (@MamataOfficial) March 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Until and unless an emergency, please don’t step out of your homes.
We will fight this together. Only we can help keep everyone around us safe (2/2)
">It is my sincere request to all the fellow citizens to abide by Government guidelines.
— Mamata Banerjee (@MamataOfficial) March 23, 2020
Until and unless an emergency, please don’t step out of your homes.
We will fight this together. Only we can help keep everyone around us safe (2/2)It is my sincere request to all the fellow citizens to abide by Government guidelines.
— Mamata Banerjee (@MamataOfficial) March 23, 2020
Until and unless an emergency, please don’t step out of your homes.
We will fight this together. Only we can help keep everyone around us safe (2/2)
அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். மிகவும் அவசரம் என்பதைத் தவிர, மற்ற நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்.
நாம் இதற்கு எதிராக ஒன்றாகப் போராடுவோம். நம்மைச் சுற்றியுள்ளவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது நம் அனைவரின் பொறுப்பு" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவை கட்டுப்படுத்த இந்தியா தீர்க்கமான நடவடிக்கை - உலக சுகாதார அமைப்பு