ETV Bharat / bharat

‘கலவரம் பண்றதுக்கு இது ஒன்னும் குஜராத் இல்ல’ - பாஜக திட்டத்தை சிதறடித்த மம்தா!

பல்துறை வல்லுநராகத் திகழ்ந்த ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலை உடைப்பை ஆளும் கட்சிக்கு எதிராகத் திருப்பி கலவரத்தை ஏற்படுத்த முயன்ற பாஜகவின் சதித்திட்டத்தை மம்தா பானர்ஜி சிதறடித்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

மம்தா
author img

By

Published : Jun 11, 2019, 7:27 PM IST

மக்களவைத் தேர்தலுக்கு முன்பும் சரி, தேர்தல் முடிந்து ஒரு மாத காலம் ஆகியும் சரி மேற்கு வங்கத்தில் பாஜக - திருணாமுல் தொண்டர்களுக்கு இடையேயான முட்டல்களும் மோதல்களும் நீறு பூத்த நெருப்பாக இன்றும் கனன்று கொண்டேதான் இருக்கின்றன. இது இரு கட்சிகளின் தலைவர்களால் தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் அல்ல, தேர்தல் முடிந்தவுடன் காற்றில் கரைவதற்கு. இது சித்தாந்தங்களுக்கு இடையேயானது. வெவ்வேறு தேசிய இனங்களை உருத்தெரியாமல் அழித்துவிட்டு ஒரே குடையின் கீழ் இந்தியாவை உள்ளடக்க எத்தனிக்கும் பாஜகவின் சித்தாந்தத்திற்கு எதிரானது!

ஏனெனில், தென் இந்திய மாநிலங்களைப் போன்றதொரு முற்போக்கு சிந்தனைக் கொண்ட மாநிலமாகத்தான் மேற்கு வங்கம் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்திய அரசியலுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் தமிழ்நாட்டின் திராவிட அரசியலுக்கு சற்றும் குறைவின்றி தான் மேற்கு வங்கத்தின் அரசியலும் கடந்த காலங்களில் அமைந்திருக்கிறது. ஆகையால்தான் அம்மாநில மக்களால் கம்யூனிசம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஜோதிபாசு பெருந்தலைவராக கொண்டாடப்பட்டார்.

இப்படி பாரம்பரிய அரசியல் வரலாறுகளோடு தனித்து விளங்கும் வங்கத்து மக்களின் தற்போதைய தலைவராக மம்தா மின்னிக்கொண்டிருக்கிறார். காங்கிரஸ் இழந்த தலைவர்களில் இவர் முக்கியமானவர். திருணாமுல் காங்கிரஸ் தலைவராகவும், மாநில முதலமைச்சராகவும் திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையேதான், மக்களவைத் தேர்தல் சமயத்தில் பாஜக - திருணாமுல் தொண்டர்களிடையே மோதல் வெடித்தது. இரு கட்சிகளின் தொண்டர்களும் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதலின்போது அம்மாநிலத்தில் பல்துறை ஆற்றலாளராகத் திகழ்ந்த ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது. ‘வங்கத்து சீர்திருத்தவாதி’ என்று மேற்கு வங்க மக்களால் கொண்டாடப்படும் வித்யாசாகரின் சிலை உடைப்பு சம்பவம் அரசியலாக்கப்பட்டது.

மம்தாவுக்கு எதிராக மாநில பாஜக தலைவர்கள் கொதித்தனர். இதற்கெல்லாம் பின்னணியில் வித்யாசாகர் மீதான பாசமெல்லாம் இல்லை, மம்தா மீதான வன்மம்தான் நிறைந்திருக்கிறது என்பது அரசியல் நிபுணர்களுக்கு வேண்டுமானால் புரிந்திருக்கலாம். ஆனால், அப்பாவி பொதுமக்களுக்கு புரிய வாய்ப்பில்லை.

வித்யாசாகர் புதிய சிலை
வித்யாசாகர் புதிய சிலை

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, கலவர நோக்கோடு பாஜக தலைவர்கள் பேசி வருவதை கவனித்த மம்தா, உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலையை அதே இடத்தில் மீண்டும் புதுப்பொலிவுடன் பிரமாண்டமாக அமைப்பதென முடிவெடுத்தார். அதனடிப்படையில், ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலையை புதுப்பொலிவுடன் இன்று மீண்டும் மம்தா பானர்ஜி திறந்துவைத்துள்ளார்.

பேரணியாக சென்ற மம்தா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்
பேரணியாக சென்ற மம்தா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள்
வித்யாசாகர் சிலை திறப்பு விழாவில்...
வித்யாசாகர் சிலை திறப்பு விழாவில்...

எழுத்தாளர்கள், கவிஞர்கள், அரசியல் தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என பலரும் பங்கேற்றிருந்த இந்த விழாவில் பேசிய மம்தா பானர்ஜி, “இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. பாரம்பரியம் இருக்கிறது. இது நமது இந்தியா. எந்த மாநிலத்தின் எதிர்காலத்தையும் பாஜக நிர்ணயிக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டில் ஒரு சிலரின் தேவைக்காக இந்தியைத் திணிக்கும் முயற்சிகள் நடக்கிறது. இது கண்டனத்துக்குரியது. இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பது என்பது, வேற்றுமையில் ஒற்றுமை என்ற நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைப்பதாகும்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மேற்கு வங்கம் ஒன்றும் குஜராத் இல்லை. கலவரம் செய்து ஆட்சியை பிடிப்பதற்கு! இங்கு கலவரங்களுக்கு இடமில்லை. ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலையை வைத்து கலவரத்தை உருவாக்க நினைத்த பாஜகவின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டிருக்கிறது” என்று கர்ஜித்துள்ளார்.

மம்தா
மம்தா

இது போன்ற பதிலடிகள் பாஜகவுக்கும், அதன் தலைவர்களுக்கும் புதிதல்ல என்றாலும், ‘கலவரம் பண்றதுக்கு இது ஒன்னும் குஜராத் இல்ல’ என்ற மம்தாவின் தற்போதைய பதிலடி கொஞ்சம் புதிய டிசைன்தான்!

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/state/west-bengal/mamata-unveils-vidyasagars-bust-2/na20190611150544218

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.