ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு தகுதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு என்ன நேர்ந்தது, அவர்கள் எப்படி உள்ளார்கள் என்பது குறித்து கூட வெளியுலகுக்கு தெரியப்படுத்தப்படவில்லை.
இதையடுத்து, வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் புகைப்படம் வெளியிடப்பட்டது. இது, சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. தாடியுடன் இருக்கும் அவரை யாராலும் எளிதாக அடையாளம் காணமுடியவில்லை. இதுகுறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, " என்னால் அவரை அடையாளம் காணமுடியவில்லை. சோகமாக இருக்கிறது. துரதிர்ஷ்ட வசமாக ஜனநாயக நாட்டில் இப்படி நடைபெறுகிறது. இதற்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும்? " என்றார்.
இதையும் படிங்க: குடியரசுத் தினத்தன்று பறிக்கப்பட்ட சுதந்திரம்?