ETV Bharat / bharat

தமிழ்நாட்டில் திமுக, மேற்குவங்கத்தில் மம்தா... நெருங்கும் தேர்தல்: கருத்துக்கணிப்பு கூறுவது என்ன? - ஐஏஎன்எஸ் சி வோட்டர் கருத்தக்கணிப்பு

டெல்லி: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை கைப்பற்றும் எனவும் மேற்குவங்கத்தில் அடுத்த முதலமைச்சராக வருவதற்கு மம்தாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் ஐஏஎன்எஸ் சி - வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மம்தா
மம்தா
author img

By

Published : Jan 19, 2021, 6:25 PM IST

வரும் மே மாதம், தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஐஏஎன்எஸ் சி - வோட்டர் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை கைப்பற்றும் எனவும் மேற்குவங்கத்தில் அடுத்த முதலமைச்சராக வருவதற்கு மம்தாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

294 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட மேற்குவங்கத்தில், 154 இடங்களில் வெற்றிப்பெற்று மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், முந்தைய தேர்தலைவிட 53 தொகுதிகள் குறைவாக பெறும் எனவும் பாஜக கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் 99 தொகுதிகள் அதிகம் பெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 162 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என கருத்தக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளும் அதிமுக கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற 72 தொகுதிகளில் இந்த முறை படுதோல்வியை சந்திக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 77 தொகுதிகளில் வெற்றி பெற்று சர்பானந்தா சோனாவால் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடந்த தேர்தலை காட்டிலும் 14 தொகுதிகள் அதிகமாக பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவில் பினராயி விஜயன் மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என 46.7 விழுக்காடு வாக்காளர்கள் விரும்புவதாக கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடது ஜனநாயக முன்னணி 85 தொகுதிகளிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 53 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஆட்சியை கைப்பற்ற அதிமுகவுக்கு வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.