ETV Bharat / bharat

லோக்பால் அமைக்காமல் இழுத்தடிக்கும் அரசு...தொடர்ந்து அழைப்பை மறுக்கும் காங்கிரஸ்!- என்னதான் பிரச்னை? - லோக்பால்

டெல்லி: ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால் தேர்வுக் குழுக் கூட்டத்திற்கான அழைப்பை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 7வது முறையாக நிராகரித்துள்ளார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் குரல் மௌனமாக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே
author img

By

Published : Mar 15, 2019, 7:08 PM IST

லோக்பால்

ஊழல் கண்காணிப்பு அமைப்பான லோக்பாலை அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. எம்.பி.க்கள் பிரதமர் உள்ளிட்ட பலரையும் விசாரணை செய்யும் அதிகாரம் கொண்ட அமைப்பாகத் திகழும் லோக்பால் மசோதா கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் இதற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த காங்கிரஸ்

நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 10 சதவிகித வாக்குகளைப் பெற்றால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற முடியும். இந்த நிலையில், கடந்த 2014 தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. இருப்பினும் நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சி என்ற இடத்தில் உள்ளது. இதனிடையே லோக்பால் தேர்வுக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவரும் உறுப்பினராக இடம்பெற வேண்டும் என்பதைக் காரணம் காட்டி மத்திய அரசு லோக்பால் தேர்வுக் குழுவை அமைக்காமல் இருந்தது.

உச்ச நீதிமன்றம் உத்தரவு

எதிர்க்கட்சித் தலைவர் இல்லை என்ற காரணத்திற்காக லோக்பால் தேர்வுக் குழு அமைக்காமல் இருக்க வேண்டும் என்பதில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே லோக்பால் தேர்வுக் குழுவில் சிறப்பு அழைப்பாளராக சேர்க்கப்பட்டு தேர்வுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டார்.

மறுத்து வரும் மல்லிகார்ஜூன் கார்கே

தொடர்ந்து 7 முறை அழைக்கப்பட்டும் லோக்பால் தேர்வுக் குழுக் கூட்டத்திற்குச் செல்ல மல்லிகார்ஜூன் கார்கே மறுத்து வருகிறார். "இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் குரலை அரசு மௌனமாக்குகிறது" என்று கூறிவருகிறார். இது குறித்து அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், சிறப்பு அழைப்பாளருக்கு லோக்பால் குழுவைத் தேர்வு செய்ய அதிகாரம் இல்லை. லோக்பால் மசோதாவில், எதிர்க்கட்சியில் வரிசையில் உள்ள பெரிய கட்சியை சேர்க்க வேண்டும் என பல முறை வலியுறுத்தியும் இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். இதுபோன்ற முக்கியமான விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் தேர்வு செய்வது ஒரு தலைபட்சமானது என்றும் மல்லிகார்ஜுன் கார்கே தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக லோக்பால் அமைப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு தான் கூட்டத்திற்கு கலந்துகொள்ளாதது தான் மத்திய அரசு கூறி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Intro:Body:

Malikarjuna karke

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.