மக்களவைத் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வரும்நிலையில் பாஜக 340-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது. மேலும், கர்நாடக மாநிலத்தில் பாஜக மீண்டும் தலை தூக்கியுள்ளது. அதன்படி, அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதியில் பாஜக 24 இடங்களில் முன்னிலை வகித்துவருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் குல்பர்கா மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்லிகார்ஜுன் கார்கே தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் உமேஷ் ஜாதவை விட 50 ஆயிரம் வாக்குகள் பின்தங்கியுள்ளார்.
இதனால் இந்தத் தொகுதியிலும் காங்கிரஸ் தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், காங்கிரஸ் கட்சியின் ஊழல் நிறைந்த கொடூர ஆட்சிக்கு மக்கள் முடிவு கொண்டுவந்து விட்டதாக கர்நாடக மாநில பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.