புதுச்சேரி மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வெளியிட்ட வீடியோவில், ”புதுச்சேரி மாநில ஏனாம் பிராந்தியத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு கிரண்பேடி கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் தராமல் நிறுத்தி வைத்துள்ளார். குறிப்பாக, ஏனாம் பிராந்திய கிராமங்களில் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் சுகாதாரக்கேடு ஏனாம் பகுதியில் ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு கிரண்பேடிதான். மேலும், அவர் மீனவர்கள், ஏனாம் தொகுதி மக்களுக்கு எதிராக செயல்பட்டுவருகிறார். எனவே, இவர் மீது பிரதமர், உள்துறை அமைச்சரிடம் கடிதம் மூலம் புகார் தெரிவிக்க உள்ளேன். இனிமேல் புதுச்சேரியில் நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் ஒருமணி நேரத்திற்குள் கோவிட்-19 சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுபோல் தெரியவில்லை. மக்கள் கூட்டம் மாநகர சாலைகளில் அதிகமாக உள்ளது. எனவே, இனிமேல் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அறிவிக்க முதலமைச்சருக்கு பரிந்துரை செய்ய இருக்கிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கிரண்பேடி இரண்டு மடங்கு செலவு செய்துள்ளார்: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்