கர்நாடாகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ முகாம்பிகா கோயிலில் வசித்து வந்த இந்திரா என்ற 62 வயதான பெண் யானை, காய்ச்சல் காரணமாக ஆகஸ்ட் 20ஆம் தேதி உயிரிழந்தது. அதைத் தொடர்ந்து, சிவமொக்காவில் உள்ள சாக்ரெபில் யானை முகாமில் கடந்த 23ஆம் தேதியன்று 35 வயதுடைய நாகன்னா என்ற ஆண் யானை உயிரிழந்தது.
காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களால், அடுத்தடுத்து யானைகள் உயிரிழப்பது விலங்குகள் நல ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், யானைகள் உயிரிழப்பு தொடர்பாக கர்நாடகா வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.