ETV Bharat / bharat

இந்தியாவில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட முக்கிய விஷ வாயு விபத்துகள்...! - தொழிற்சாலையில் ஏற்பட்ட முக்கிய விஷ வாயு விபத்துகள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ள கிராமத்தில் இயங்கிவரும் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. இதனால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். விஷவாயு சுவாசித்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், சுவாசக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பல்வேறு தரப்பினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

major-gas-leak-accidents-in-india-in-recent-past

author img

By

Published : May 7, 2020, 10:48 PM IST

இன்று ஏற்பட்ட விஷ வாயு விபத்திற்கு முன்னதாக நிகழ்ந்த முக்கிய விஷ வாயு விபத்துகள்:

  • 02.12.1984 : போபாலில் இயங்கி வரும் மத்திய கார்பைட் ஆலையிலிருந்து 30 டன் விஷ வாயு கசிந்ததில் 3 ஆயிரத்து 787 பேர் உயிரிழந்தனர். ஆனால் இந்த விபத்தில் 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
  • 12.11.2006: குஜராத்தின் அங்கலேஸ்வர் பகுதியில் இயங்கிய எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் விஷ வாயு கசிந்தது. அதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
  • 16.07.2010: மேற்கு வங்கத்தில் உள்ள துர்காபூர் பகுதியில் இயங்கும் எஃகு ஆலையில் இருந்து வெளியாகிய கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்த 25 பேர் பல்வேறு நோய்களுக்கு ஆளானார்கள்.
  • 0.08.2011: கர்நாடக மாநிலத்தின் ஜிண்டால் எஃகு ஆலையில் இருந்து வெளியாகிய விஷ வாயுவால் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
  • 23.03.2013: தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இயங்கி வரும் ஆலையில் சல்ஃபர் டை ஆக்சைடு என்னும் கெமிக்கல் கசிந்தது. இதனை சுவாசித்த ஒருவர் உயிரிழந்தார். நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சுவாசப் பிரச்னைகள் ஏற்பட்டது.
  • 05.06.2014: தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இயங்கும் நிலா மீன் பதப்படுத்தும் ஆலையில், அம்மோனியா வாயு குழாய் வெடித்ததில் 54 பெண்கள் மயக்கமடைந்தனர்.
  • 07.08.2014: கேரளாவின் கொல்லம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசின் சொந்த ஆலையில் இருந்து வெளியானவாஉவை சுவாசித்ததில் 70 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டனர்.
  • 27.08.2014: மேற்கு வங்கத்தில் பர்ட்வான் பகுதியில் செயல்பட்டு வந்த வெல்டிங் கடையில் உள்ள சிலிண்டர் வெடித்ததில் 2 பெண்கள் உயிரிழந்ததோடு, 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
  • 13.07.2014: சட்டீஸ்கர் மாநிலத்தில் பில்லை (Bhilai) உருக்கு ஆலையில் இருந்து திடீரென வெளியான விஷ வாயுவால், அந்த ஆலையின் இணை மேலாளர் சிங்கால், கடரியா உட்பட ஐந்து உயர் அலுவலர்கள் உயிரிழந்தனர். இதில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
  • 03.11.2016: பொதுத்துறை ஆலையான குஜராத்தின் நர்மதா உரம் மற்றும் ரசாயன ஆலையிலிருந்து கசிந்த பாஸ்பரஸ் விஷ வாயுவால் 4 தொழிலாளர்கள் உயிரிழந்ததோடு, 13 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
  • 15.03.2017: உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள சேமிப்பகத்திலிருந்து அம்மோனியா விஷ வாயு வெளியாகி விபத்து ஏற்பட்டது. அதில் 9 பேர் உயிரிழந்தனர்.
  • 05.05.17: டெல்லியின் துக்லக்காபாத்தின் பகுதியில் வெளியான விஷ வாயுவால், அதே பகுதியில் செயல்படும் ராணி ஜான்சி சர்வோதயா கன்யா வித்யாலயா மகளிர் பள்ளியில் படித்த 475 மாணவிகளும், 9 ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
  • 03.05.2017: குஜராத்தின் பருச் மாவட்டத்தில் செயல்பட்டு வந்தக் கழிவு மறுசுழற்ச்சி ஆலையில் ஏற்பட்ட விஷ வாயு கசிவால் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
  • 06.02.2017: சேமிப்புக் கிடங்கிலிருந்து வெளியான குளோரின் விஷ வாயுவை சுவாசித்த 72 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
  • 03.07.2018: உத்தர பிரதேச மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் ஆலையில் இருந்து வெளியான விஷ வாயுவால் இருவர் உயிரிழந்தனர்.
  • 12.07.2018: ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனந்தபுரா மாவட்டத்தில் எஃகு ஆலையில் ஏற்பட்ட விபத்தால் வெளியான விஷ வாயுவால் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
  • 03.12.2018: மகாராஷ்ட்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தின் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தால் வெளியான அம்மோனியா விஷ வாயுவை சுவாசித்ததால் 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
  • 12.05.2019: மகாராஷ்ட்டிராவின் தாராபூர் பகுதியில் செயல்படும் ரசாயன ஆலையிலிருந்து வெளியான விஷ வாயுவால் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
  • 06.02.2020: உத்தர பிரதேச மாநிலத்தின் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ரசாயன ஆலையிலிருந்து வெளியான விஷ வாயுவால் மூன்று குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: விபத்து ஏற்பட்ட விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலை யாருடையது?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.