மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டத்தின் டிகி என்னும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 8 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிலிண்டரில் வாயு கசிந்ததால், இந்த விபத்து நேர்ந்துள்ளது என்பது தெரியவந்தது.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.