ETV Bharat / bharat

மகாராஷ்டிரா சட்டப்பேரவையை அலங்கரிக்கப் போகும் 24 பெண்கள்! - மகாராஷ்டிரா சட்டசபை

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்குள் 24 பெண்கள் எம்எல்ஏ-க்களாக அடியெடுத்து வைக்கின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இது இரண்டு அதிகமாகும்.

maharashtra women mlas
author img

By

Published : Oct 25, 2019, 8:47 PM IST

மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்து நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தம் 24 பெண்கள் வெற்றிவாகை சூடியுள்ளனர். அவர்களில் இரண்டு பேர் சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆவர்.

அந்த வகையில் ஏற்கனவே சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர்களும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள்...

  1. மந்தா மாத்ரே (பெலாப்பூர்),
  2. மணிஷா சவுத்ரி (தஹிசார்),
  3. வித்யா தாகூர் (கோரேகான்),
  4. தேவ்யாணி பாரன்டே (நாசிக் சென்ட்ரல்),
  5. சீமா ஹிரே (நாசிக் மேற்கு),
  6. மாதுரி மிஷல் (பார்வதி),
  7. மோனிகா ராஜாலே (சேவ்கான்),
  8. பாரதி லாவ்கேகர் (வெர்சோவா).

இவர்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியைத் சேர்ந்தவர்கள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பாஜக சார்பில் போட்டியிட்ட 22 பெண்களில் 14 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.

இவர்கள் தவிர காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட 14 பெண்களில் ஐந்து பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதில் மூன்று பேர் மீண்டும் தங்களுக்கான இடத்தை தக்கவைத்துள்ளனர். அவர்கள்...

  1. பிரணிதீ ஷிண்டே (சோலாப்பூர் சிட்டி சென்ட்ரல்),
  2. யாஷோமதி தாகூர் (தியோசா),
  3. வர்ஷா கெய்க்வாட் (தராவி)

பாரதிய ஜனதா சார்பில் முதல்முறையாக சட்டப்பேரவைக்குள் காலடி எடுத்துவைக்கவுள்ளோர்...

  1. ஸ்வேதா மேகாலே (சிக்லி),
  2. மேக்ஹானா போர்டிகர் (ஜிந்தூர்),
  3. நமீதா முண்டடா (காஜி),
  4. முக்தா திலக் (கஸ்பா பெத்).

காங்கிரஸ் சார்பில் முதல்முறையாக சட்டப்பேரவைக்குள் காலடி எடுத்துவைக்கவுள்ளோர்...

  1. தனோகர் (வரோரா),
  2. சுல்பா கோட்கே (அமராவதி).

தேசியவாத காங்கிரஸ் எட்டு பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியது. அவர்களில் மூன்று பேர் வெற்றி பெற்றுள்ளனர். சிவசேனா சார்பில் போட்டியிட்ட எட்டு பெண்களில் இருவர் வெற்றியை ருசித்துள்ளனர்.

மகாராஷ்டிரா தேர்தலில் பீட் மாவட்டம் பார்லி தொகுதியில் போட்டியிட்ட பங்கஜ் முண்டே தோல்வியைத் தழுவினார். 288 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட மூன்றாயிரத்து 237 வேட்பாளர்களில் 235 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி?

Intro:Body:

maharashtra Women candidates- election result

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.