கரோனா வைரஸ் நோய் இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. ஏழை, பணக்காரன் என எவரையும் விட்டுவைக்காத இந்நோய் தற்போது மகாராஷ்டிரா வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர அவத்தை பாதித்துள்ளது.
அவரின் பாதுகாவலர் ஒருவர் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 10 நாள்களாக ஜிதேந்திர அவத் மற்றும் அவரின் குடும்பத்தார் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். முதற்கட்ட பரிசோதனை அறிக்கையில் அவர் நோயால் பாதிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டது.
பின்னர் வெளியான அறிக்கையில், அவர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர், ஏப்ரல் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மகாராஷ்டிரா அமைச்சருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பல அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: மாநிலங்கள் மோசமான நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன - ப. சிதம்பரம்