ETV Bharat / bharat

950 மரணங்களை மறைக்கும் மகாராஷ்டிரா: பட்னாவிஸ் பகீர் புகார் - Maharashtra Devedra Fadanavis

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனாவால் ஏற்பட்ட 950 மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில எதிர்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Fadnavis
Fadnavis
author img

By

Published : Jun 16, 2020, 10:24 AM IST

இந்தியாவில் வர்த்தகத் தலைநகராகக் கருதப்படும் மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரம் என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது. அம்மாநிலத்தில் மட்டும் இதுவரை நான்காயிரத்து 128 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அம்மாநில அரசு கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைத்துவருவதாக மாநில எதிர்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "கரோனா தொடர்பான மரணங்களை மாநில அரசு அறிவிக்கும் முன்னர் அவை மும்பை மாநகராட்சிக் குழுவின் மேற்பார்வைக்கு வைக்கப்படும். இந்தக் குழுவின் புள்ளிவிவரப்படி, மும்பை நகரில் மட்டும் இதுவரை 451-க்கும் மேற்பட்ட மரணங்களை மாநில அரசு அறிவிக்கவில்லை. மேலும், மாநிலம் முழுவதும் சுமார் 950 மரணங்களை அரசு மறைத்துவருகிறது" எனக் கடும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துவேறுபாட்டால் சிவசேனாவுடன் கூட்டணி முறிவு ஏற்பட்டு பாஜக தற்போது எதிர்க்கட்சியாகச் செயல்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.