மகாராஷ்டிரா தலைநகர் மும்பையிலிருந்து சுமார் 370 கி.மீ, தொலைவில் உள்ள அவ்ரங்கபாத் பகுதியில் எட்டு பேர் கொண்டு ஒரு கும்பல் ஒரு பெண், அவரது கணவரை நிர்வாணமாக்கி சரமாரியாகத் தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவந்தது.
அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து அவுரங்காபாத் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, "சம்பவத்தன்று இரவு 8:20 மணியளவில் பாதிப்பட்ட தம்பதியர் ஆட்டோவில் சென்றுள்ளனர். அப்போது, அந்த ஆட்டோவிலிருந்து இன்னொரு நபர் தம்பதிகளின் முகத்திலும் மயக்க மருந்து கலந்த துணையை வைத்து மயக்கமடைந்தச் செய்துள்ளார்.
பிறகு, மயக்கமடைந்த தம்பதிகளை ஒரு அறைக்கு எடுத்துச் சென்ற அந்த நபர், மேலும் சிலரோடு சேர்ந்து அவர்களை நிர்வாணமாக்கி சரமாரியாகத் தாக்கினார்.
2016ஆம் ஆண்டு, அந்த பெண் அங்கிருந்த சில நபர்கள் மீது கொடுத்திருந்த பாலியல் வழக்கை திரும்பப்பெற வலியுறுத்தி இவ்வாறு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தம்பதிகளைச் சந்தித்துப் பேசினோம். பின்னர், குற்றவாளிகள் மீது பல்வேறு பரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
தம்பதிகளை தாக்கிய அந்த கும்பல் அவரின் உறவினர்கள் எனத் தெரிகிறது.
அந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்பட்டவில்லை என அகமது நகர் காவல் துறை கண்காணிப்பாளர் சாகர் பாட்டில் கூறினார்.
இதையும் படிங்க : கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அருகே காமராஜர் சிலை அமைக்க வேண்டும் - வசந்தகுமார் எம்.பி. கோரிக்கை