மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மூன்று பெண்கள் உட்பட 7 நக்சல்கள் கட்சிரோலி காவல்நிலையத்தில் சரணடைந்தனர். இதனால், அவர்களுக்கு ரூ 33.5 லட்சம் வெகுமதியாக அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் சார்பில், "மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நக்சல்கள் சரணடைந்துள்ளனர். இது, எங்களுக்கு மிகப் பெரிய வெற்றி. காவல்துறை சார்பில் அழுத்தம் அளிக்கப்பட்டதே அவர்கள் சரணடைவதற்கு காரணம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரணடைந்த நக்சல்களான தலா ராகேஷ் என்ற கணேஷ், தேவிதாஸ் என்ற மணிராம், ராகுல் என்ற தாம்ஜி சோம்ஜி பலோ, சிவா விஜயா, ரேஷ்மா, அகிலா, கருணா ஆகியோர் தலாம் பகுதியில் பல தாக்குதல்களை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.