மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம், சவிந்தார கிராமத்தில் உள்ள ஆற்றுக்கு மீன் பிடிப்பதற்காக, கடந்த சனிக்கிழமையன்று சகோதரர்களான ஷபாஸ் அன்சாரி (24), ஷஹாலாம் அன்சாரி (22) ஆகியோர் தன் தாயோடு சென்றுள்ளனர்.
அம்மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால், ஆற்றின் நீரோட்டம் வேகமாக இருந்துள்ளது. தொடர்ந்து அவர்கள் இருவர் ஆற்றின் அருகே நின்றுகொண்டு தங்கள் செல்போனில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரில் ஒருவர் தண்ணீரில் விழுந்து மூழ்கியுள்ளார். அவரைக் காப்பாற்ற மற்றொருவரும் நீரில் விழவே, கடைசியில் இரண்டும் பேரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் பாருங்க: செல்ஃபி எடுக்க ஆற்றில் இறங்கிய இளம்பெண்கள் வெள்ளத்தில் தவிப்பு: மீட்ட காவல் துறை!