ETV Bharat / bharat

மும்பையில் முதல் மாடியிலிருந்து விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு! - குழந்தை உயிரிழப்பு

மும்பை: முதல் மாடியிலிருந்து கீழே விழுந்த இரண்டு வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

Toddler falls off balcony
Toddler falls off balcony
author img

By

Published : Mar 15, 2020, 6:02 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரின் சாகேத் நகரி என்ற பகுதியிலுள்ள ஒரு வீட்டின் முதல் மாடியிலிருந்து கீழே விழுந்த இரண்டரை வயது குழந்தை உயிரிழந்தது. மாடியிலுள்ள பால்கனியில் குழந்தைக்கு அவரது தாய் உணவளித்துக் கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் குழந்தை கீழே விழுந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "உணவளித்துக் கொண்டிருந்த குழந்தையின் தாய், மீண்டும் உணவை எடுத்து வர சமையலறைக்குச் சென்றுள்ளார். அந்தச் சமயத்தில் குழந்தை பால்கனியின் சுவரில் ஏறியுள்ளது. அப்போது நிலை தடுமாறியதில் குழந்தை சாலையில் விழுந்தது.

இதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருகிலிருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தது" என்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: '2 குழந்தைகள் போதும்' - புது மசோதா கொண்டுவரும் காங்கிரஸ் எம்.பி.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.