இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிசார்கா புயலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித்தொண்டர்கள் உதவவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கடற்கரையோர மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கவேண்டும் எனவும் மாநில அரசின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எனவும் தேசியவாத காங்கிரஸின் எம்.பி சுப்ரியா சூலே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சுமார் 100 கி.மீ வேகத்தில் தாக்கிய இந்தப்புயலால், மும்பை, தானே, பால்கர், ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.