ETV Bharat / bharat

தப்பித்தது தாக்கரேவின் முதலமைச்சர் பதவி! - உத்தவ் தாக்கரே எம்எல்சி

மும்பை: காங்கிரஸ் கட்சி தனது ஒரு வேட்பாளரின் மனு தாக்கல் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளதால் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே போட்டியின்றி அம்மாநில சட்டமேலவைக்குச் செல்லவுள்ளார்.

Uddhav Thackeray
Uddhav Thackeray
author img

By

Published : May 11, 2020, 2:40 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ் என இரு கூட்டணிக்கும் இந்தத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தொங்கு சட்டப்பேரவை அமைந்ததால் ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டது.

பல்வேறு அரசியல் குழப்பங்களுக்குப் பின் இறுதியில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தது. சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே கடந்தாண்டு நவம்பர் 28ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார்.

இருப்பினும் அவர் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உறுப்பினராக இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ஒருவர் அமைச்சர் அல்லது முதலமைச்சராகப் பதவியேற்க ஆறு மாதங்களுக்குள் மேலவை அல்லது கீழவை என ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக வேண்டும். அதன்படி உத்தவ் தாக்கரேவுக்கான காலக்கெடு மே 26ஆம் தேதிவரை ஆகும். அதற்குள் அவர் சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும்.

கோவிட்-19 பரவல் காரணமாக தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. இதனால் உத்தவ் தாக்கரேவை சட்டமேலவை உறுப்பினராக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மகாராஷ்டிர சட்டமேலவையில் காலியாக இருக்கும் ஒன்பது இடங்களுக்கு மே 21ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது சட்டப்பேரவையிலுள்ள பலத்தின் அடிப்படையில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணிக்கு ஐந்து இடங்களும் பாஜகவுக்கு நான்கு இடங்களும் கிடைக்கும்.

இருப்பினும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் உள்பட ஆறு பேர் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி சார்பில் மனு தாக்கல் செய்ததால் தேர்தல் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் பாலாசாகேப் தோரத் காங்கிரஸ் கட்சியின் ஒரு மனு தாக்கல் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதனால் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே போட்டியின்றி சட்டமேலவைக்குச் செல்வது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அவர் முதலமைச்சர் பதவியைத் தக்கவைத்துக்கொள்வார்.

இதையும் படிங்க: மன்மோகன் சிங் உடல்நிலை எப்படி உள்ளது - மருத்துவமனை வட்டாரம் புது தகவல்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.