ETV Bharat / bharat

இரண்டு மகன்களை கொன்று தந்தை தற்கொலை - குழந்தைகள் உயிரிழப்பு

போபால்: மத்தியப் பிரதேசத்தில் இரண்டு மகன்களை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

father who killed the children
father who killed the children
author img

By

Published : Sep 13, 2020, 8:39 PM IST

மத்தியப் பிரதேம் மாநிலத்தைச் சேர்ந்த பூரா பூசாம்(27) என்பவரின் மனைவி அவரது தாயாரின் வீட்டில் மூன்று குழந்தைகளுடன் சில நாட்களாக தங்கி இருந்துள்ளார்.

பின்னர் பூசாம் மனைவியை அழைத்தார். ஆனால் மனைவி வர மறுத்ததால் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார். அதன்பின் அருகே இருந்த ஒரு காட்டுப் பகுதியில் தனது குழந்தைகளில் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதில் இரண்டு ஆண் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு வயது குழந்தை மட்டும் உயிருக்கு போராடியது. அப்போது குழந்தையின் அழுகுரல் கேட்டு சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அங்குஷ் கிராமவாசிகளுக்கும், காவல் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இந்த குறித்து வழக்குப் பதிவு செய்த ரூப்ஜார் காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.